வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

2 நாள்களில் பவுனுக்கு ரூ.248 குறைந்தது

ஆபரணத் தங்கத்தின் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.

Updated On :2 மார்ச் 2013, 5:54 am IST

ஆபரணத் தங்கத்தின் விலை 2 நாள்களில் பவுனுக்கு ரூ.248 குறைந்துள்ளது.

சென்னை மார்க்கெட்டில் வெள்ளிக்கிழமையன்று (மார்ச் 1), ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ. 22 ஆயிரத்து 88-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த சில வாரங்களாகவே தங்கத்தின் விலையில் சிறிய அளவிலான ஏற்ற இறக்கம் காணப்பட்டு வந்தது. இந்த நிலையில் தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைப்பதற்காக மத்திய பட்ஜெட்டில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. நாட்டின் பணப்புழக்கத்தை அதிகரிக்க, தங்கத்தின் மீதான முதலீட்டைக் குறைக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது.

இதன் காரணமாக தங்கத்தின் விலை கடந்த இரு நாள்களாக குறைந்து வருகிறது. கடந்த புதன்கிழமை (பிப்.27) ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ரூ.22 ஆயிரத்து 336-க்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலை சரிவு: தங்கத்தின் விலை குறைந்ததன் தாக்கம் வெள்ளி விலையிலும் எதிரொலித்துள்ளது. இரு நாள்களில் வெள்ளி கிலோவுக்கு ரூ.840 குறைந்துள்ளது.

வெள்ளிக்கிழமை நிலவரம்:

22 காரட் தங்கம்

ஒரு கிராம் - ரூ.2,761

ஒரு பவுன் - ரூ.22,088

ஒரு கிராம் வெள்ளி - ரூ.57.60

ஒரு கிலோ

கட்டி வெள்ளி - ரூ.53,860

வியாழக்கிழமை நிலவரம்:

22 காரட் தங்கம்

ஒரு கிராம் - ரூ.2,774

ஒரு பவுன் - ரூ.22,192

ஒரு கிராம் வெள்ளி - ரூ.57.90

ஒரு கிலோ

கட்டி வெள்ளி - ரூ.54,105

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.