சித்திரா பெளர்ணமியன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் உலக நன்மை வேண்டி 1008 யாக குண்டங்கள் அமைத்து சிறப்புப் பூஜை வரும் 25-ஆம் தேதி நடைபெற உள்ளது.
ஆண்டுதோறும் சித்திரா பெüர்ணமியன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜைகள், யாகசாலை, கலசவேள்வி பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வரும் வெள்ளிக்கிழமை சித்ரா பெüர்ணமியை முன்னிட்டு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
இதில் உலக நன்மை வேண்டி 1008 யாக குண்டங்கள் அமைத்து கலசவிளக்கு, வேள்வி பூஜைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 1008 யாக குண்டங்கள் அமைக்கும் பணி கடந்த 15-ஆம் தேதி குரு பூஜை, வினாயகர் பூஜை, சக்தி பூஜையுடன் தொடங்கியது. வட்டம், சதுரம், சாய்சதுரம், முக்கோணம், ஐங்கோணம், அறுங்கோணம், நாகவடிவம், சூலவடிவங்களில் யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பால் பொக்லைன் இயந்திரத்தின் வாடகை ஒரு மணி நேரத்துக்கு ரூ.300 உயா்வு

தனியாா் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்ற உத்தரவுக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

விஜய்தாமு, தளவாய் சுந்தரம், இசக்கி சுப்பையா வெற்றியை எதிா்த்து தோ்தல் வழக்குகள் தாக்கல்






