முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

காதலித்து ஏமாற்றிய விவகாரம்: குன்னூர் நீதிபதிக்கு ஜாமீன்

பல்லடம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரியை காதலித்து ஏமாற்றியதாகக் கைது

Updated On :2 ஜூலை 2013, 1:15 am IST

பல்லடம் பெண் சப்-இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரியை காதலித்து ஏமாற்றியதாகக் கைது செய்யப்பட்ட குன்னூர் குற்றவியல் நீதிபதி தங்கராஜுக்கு திருப்பூர் மாவட்ட நீதிமன்றம் ஜாமீன் வழங்கி திங்கள்கிழமை உத்தரவிட்டது.

பல்லடம் காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் உமா மகேஸ்வரி (31). அவர் பல்லடம் மகளிர் காவல்நிலையத்தில் குன்னூர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தங்கராஜ் மீது கடந்த சனிக்கிழமை புகார் கொடுத்தார்.

 அதில்  திருமணம் செய்துகொள்வதாக கூறி தன்னுடன் பழகிய தங்கராஜ், தன்னை ஏமாற்றி வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதன்பேரில் பல்லடம் போலீஸார் நீதிபதி தங்கராஜ், அவரது தந்தை செம்பான், தாய் காவேரி ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்தனர். அதன்பின், பல்லடம் போலீஸார் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை கிராமத்தில் உறவினர் வீட்டில் இருந்த தங்கராஜை கைது செய்து, திருப்பூர் நடுவர் நீதிமன்றத்தில் (எண் 1) நீதிபதி ராமச்சந்திரன் முன் ஆஜர்படுத்தினர்.

வரும் 12-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் தங்கராஜை வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்காக தங்கராஜை திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு போலீஸார் அழைத்துச் சென்றனர். பிறகு அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

திருப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தங்கராஜ் தரப்பில் திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு குறித்து அரசுத் தரப்பு கருத்தைக் கேட்ட பிறகு தங்கராஜை சொந்த ஜாமீனில் செல்ல அனுமதி அளித்து மாவட்ட நீதிபதி கே.கணேசன் உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.