2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

செல்போனில் படம் எடுத்து மிரட்டல்: தீக்குளித்த இளம்பெண் சாவு

வேலூர் மாவட்டம், திமிரி அருகே செல்போனில் படம் எடுத்து காதலிக்குமாறு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தீக்குளித்த இளம்பெண் இறந்தார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:00 pm

தினமணி

வேலூர் மாவட்டம், திமிரி அருகே செல்போனில் படம் எடுத்து காதலிக்குமாறு மிரட்டல் விடுக்கப்பட்டதால், தீக்குளித்த இளம்பெண் இறந்தார்.

திமிரியைச் சேர்ந்த தனியார் பாதுகாப்பு நிறுவனத் தொழிலாளி சங்கரின் மகள் அபிநயா (17). இவர் பிளஸ் 2 முடித்துள்ளார்.

இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த குமாரின் மகன் ஐடிஐ மாணவர் சரத்குமார் (19) ஒருதலையாகக் காதலித்து வந்தாராம். இதற்காக அபிநயாவை செல்போனில் படம் எடுத்து, தன்னுடைய படத்துடன் இணைத்து மிரட்டினாராம். இதற்கு சரத்குமாரின் நண்பர் பிளஸ் 1 மாணவர் ஏழுமலை (எ) கபாலி (19) உதவியாக இருந்தாராம்.

இதனால், மனமுடைந்த அபிநயா தனது வீட்டில் தீக்குளித்தாராம். உடனடியாக அவர் வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், மாணவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அபிநயா சனிக்கிழமை இறந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.