தவறி விழுந்து கல்லூரி மாணவர் சாவு
சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கல்விப் பயிற்சிக்காக வந்த சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சனிக்கிழமை விடுதியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.


சேலம் மாவட்டம், ஏற்காட்டில் கல்விப் பயிற்சிக்காக வந்த சென்னையைச் சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் சனிக்கிழமை விடுதியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார்.
சென்னை தாம்பரத்தில் உள்ள ஜெருசலேம் தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு சிவில் படிக்கும் 133 மாணவர்கள் கல்விப் பயிற்சிக்காக வெள்ளிக்கிழமை ஏற்காடு வந்தனர்.
ஏற்காடு படகு இல்லம் அருகேயுள்ள தனியார் விடுதியில் அவர்கள் தங்கினர். இந்த நிலையில், சென்னை பல்லாவரம் அஞ்சல் அலுவலகத்தில் பணியாற்றும் அன்பழகன் மகன் விக்னேஷ்வரன் (20) வெள்ளிக்கிழமை இரவு அந்த விடுதியில் இருந்து தவறி விழுந்தாராம்.
இதையடுத்து, படுகாயமடைந்த அவரை சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
இதுகுறித்து ஏற்காடு காவல் நிலைய ஆய்வாளர் ரவிசந்திரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...