அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

நாகை, காரைக்கால் மீனவர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்

மீன்பிடித் தொழிலுக்குக் கடலில் எல்லைக் கட்டுப்பாடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை, காரைக்கால் மாவட்ட விசைப் படகு மீனவர்கள் கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

News image
Updated On :5 ஜனவரி 2013, 11:37 pm

தினமணி

மீன்பிடித் தொழிலுக்குக் கடலில் எல்லைக் கட்டுப்பாடு கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி, நாகை, காரைக்கால் மாவட்ட விசைப் படகு மீனவர்கள் கடந்த டிசம்பர் 30-ம் தேதி முதல் மேற்கொண்டிருந்த காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் சனிக்கிழமை வாபஸ் பெறப்பட்டது.

நாகை மற்றும் காரைக்கால் மாவட்ட மீனவக் கிராம பஞ்சாயத்தார் ஆலோசனைக் கூட்டம், நாகை டாடா நகர் சமுதாயக் கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. வேலைநிறுத்தத்தை ஞாயிற்றுக்கிழமை மாலையுடன் கைவிடுவது என இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.நாகை வட்ட மீனவக் கிராம பஞ்சாயத்தார் சில நாள்களுக்கு முன்பு மீன்வளத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவித்தனர்.

அப்போது கோரிக்கை குறித்து முதல்வரின் கவனத்துக் கொண்டு சென்று, முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்ததால் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.