/

துணைநிலை ஆளுநரை மாற்றக்கூடாது என அவரிடமே மனு அளித்த தலித் அமைப்பு நிர்வாகிகள்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை மாற்றக்கூடாது என அவரிடமே புதன்கிழமை தலித் அமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

News image
Updated On :9 ஜூலை 2014, 1:39 pm

சுஜித்குமார்

புதுச்சேரி துணை நிலை ஆளுநரை மாற்றக்கூடாது என அவரிடமே புதன்கிழமை தலித் அமைப்பு நிர்வாகிகள் கோரிக்கை மனு அளித்தனர்.

புதுச்சேரியில் ஆளுநர் வீரேந்திர கட்டாரியா- முதல்வர் ரங்கசாமி இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. கட்டாரியாவை மாற்ற வேண்டும் என முதல்வர் ஆதரவு இயக்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன.

திமுக உட்பட சில அமைப்புகள் அவரை மாற்றக்கூடாது  என வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வன்னிய அமைப்பி னர் ஆளுநர் ராஜினாமா செய்ய வேண்டும் என அவரிடமே மனு அளித்தனர்.

தலித் அமைப்புகள் மனு

இந்நிலையில் இதற்கு நேர்மாறாக தலித் அமைப்புகள் கட்டாரியாவை மாற்றக்கூடாது என அவரிடமே மனு  அளித்தனர். புதுச்சேரி தலித் விடுதலை பேரவையின் தலைவர் அருள்தாஸ் தலைமையில் நிர்வாகிகள்  வீரேந்திர கட்டாரியாவை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

அந்த மனுவில், ஆளுநர் தலையிட்டதால் தான் புதுவையில் சட்டம் ஒழுங்கு கட்டுக்குள் உள்ளது. முதல்வர் ரங்கசாமி கொல்லைப்புறமாக ஆட்களை வேலைக்கு வைத்துவிட்டு அவர்களை நிரந்தரம்செய்ய கோப்புகளை அனுப்புகிறார். அந்த கோப்புகளுக்கு கையெழுத்து போடாததால் உங்களை மாற்ற வேண்டும் என்கிறார். முதல்வரைப்பற்றி கவலைப்படாமல் துணைநிலை ஆளுநர் தனது  பதவியில் தொடர்ந்து 5 ஆண்டு காலம் நீடிக்க வேண்டும். குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோரு க்கு தலித் அமைப்புகள் சார்பில் கட்டாரியா பதவியில் நீடிக்க வலியுறுத்தி கடிதம் அனு ப்பப்படும் எனத் தெரிவித்திருந்தனர். இதனால் புதுவையில் அரசியல் வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.