அண்ணாமலைப் பல்கலை. புள்ளியல்துறையில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புள்ளியல்துறையில் 1983-82-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக புள்ளியல்துறையில் 1983-82-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு பிறகு இத்துறையில் பயின்ற 25 மாணவர்கள் பங்கேற்று தங்களது கல்லூரி நினைவுகளையும், தற்போதைய நினைவுகளையும் பகிர்ந்து கொண்டனர். இவர்களில் பலர் ஆசிரியர் பணி, மென்பொருள் பணி, ஆராய்ச்சி மற்றும் புள்ளியல்துறை வல்லுநர்கள் மற்றும் வங்கி பணி ஆகிய பல்வேறு நிலைகளில் பணியாற்றி வருகின்றனர்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர் ராஜாராமன் வரவேற்று பேசினார். பேராசிரியர்கள் எம்.ராஜகோபாலன், வி.ராமச்சந்திரன், ஆர்.சத்தியமூர்த்தி, ஆர்.இளங்கோவன் ஆகியோர் முன்னாள் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவித்த நாட்களை நினைவு கூர்ந்து வாழ்த்திப்பேசினர். முன்னாள் மாணவர் பேராசிரியர் வி.ராஜகோபாலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை முன்னாள் மாணவர்கள் நாராயணசாமி, சுரேஷ், ரவிசங்கர், சிவக்குமார், ரவிச்சந்திரன் மற்றும்ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...