சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

நெல்லையில் பரவலாக மழை: அணைகளுக்கு நீர்வரத்து இல்லை

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தபோதிலும் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2015, 4:49 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்தபோதிலும் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை.

நிகழ் தென்மேற்கு பருவத்தில் சரிவர மழை பெய்யாததால், எதிர்பார்த்தவாறு திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளுக்கு நீர்வரத்து இல்லை. இதனால் அணைகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இம்மாவட்டத்தில் கடும் வெப்பம் நிலவி வருவதால் பரவலாக தண்ணீர் தட்டுபாடு எழுந்துள்ளது.

இதனிடையே ஞாயிற்றுக்கிழமை இம்மாவட்டத்தில் இடியுடன் பரவலாக மழை பெய்துள்ளது. களக்காட்டில் அதிகபட்சம் 29.4 மி.மீ மழை பதிவாகியுள்ளது. பாபநாசம் அணையில் 2 மி.மீ, சேர்வலாறு அணையில் 1 மி.மீ, ராமநதி அணையில் 3 மி.மீ, கருப்பாநதி அணையில் 4 மி.மீ, குண்டாறு அணையில் 2 மி.மீ, அடவிநயினார் அணையில் 4 மி.மீ, கன்னடியன் அணைக்கட்டில் 2 மி.மீ மழையும் பெய்துள்ளது.

இதேபோல் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவியில் தலா 1 மி.மீ, தென்காசியில் 2.8 மி.மீ, ஆய்க்குடி 10.2 மி.மீ, செங்கோட்டையில் 2 மி.மீ, ஆலங்குளத்தில் 7.6 மி.மீ, சிவகிரி, சங்கரன்கோவிலில் தலா 7 மி.மீ, நான்குனேரியில் 2 மி.மீ, திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தலா 14 மி.மீ மழையும் பெய்துள்ளது. பரவலாக பெய்த மழையால் வெப்பம் தணிந்து காணப்பட்டது.

நீர்மட்டம் நிலவரம்: பாபநாசம் அணையின் நீர்மட்டம் 63.30 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 76.80 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 67.45 அடி, கடனாநதி அணையின் நீர்மட்டம் 48 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 54 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 62.94 அடி, குண்டாறு அணையின் நீர்மட்டம் 35.42 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 68.25 அடி, நம்பியாறு அணையின் நீர்மட்டம் 11.72 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 38 அடியாகவும் இருந்தது.

பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 477.08 கனஅடியும், மணிமுத்தாறு அணைக்கு விநாடிக்கு 15 கனஅடியும், கடனாநதி அணைக்கு விநாடிக்கு 89.80 கனஅடி, ராமநதி அணைக்கு விநாடிக்கு 27.96 கனஅடி, குண்டாறு அணைக்கு விநாடிக்கு 10.34 கனஅடி, அடவிநயினார் அணைக்கு விநாடிக்கு 7 கனஅடியும், கொடுமுடியாறு அணைக்கு விநாடிக்கு 33.23 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.

பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்கு பாபநாசம் அணையிலிருந்து 504.75 கனஅடியும், மணிமுத்தாறு அணையிலிருந்து 155 கனஅடியும், கடனாநதி அணையில் 110 கன அடியும், ராமநதி அணையில் 40 கன அடியும், கருப்பாநதி அணையில் 10 கனஅடியும், குண்டாறு அணையில் 5 கனஅடியும், அடவிநயினார் அணையில் 25 கன அடியும், வடக்குப்பச்சையாறு அணையில் 10 கன அடியும், கொடுமுடியாறு அணையில் இருந்து 50 கன அடியும் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.