சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசியதற்கு, திமுக பொருளாளரும், கட்சியின் பேரவைக் குழு தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சட்டப் பேரவையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசியதற்கு, திமுக பொருளாளரும், கட்சியின் பேரவைக் குழு தலைவருமான மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து, பேரவைக்கு வெளியே செய்தியாளர்களுக்கு திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:

கூட்டத்தொடர் குறித்து ஏற்கனவே கடந்த 21 ஆம் தேதி அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் நடத்துவது என்று முடிவு செய்து உள்ளது.

அதன்படி முதல் நாளில் முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பும், குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாம், இசை அமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், முன்னாள் அமைச்சர் செந்தூர் பாண்டியன் ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானமும் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

இதற்கான நிகழ்ச்சி நிரல் முன்கூட்டியே உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால் பேரவை கூடியதும் இந்த மரபுப்படி நடக்காமல் முதல்வரை பாராட்டும் வகையில் பேரவைத் தலைவர் புகழ்ந்து பேசுகிறார்.

அவர் பேச, பேச 50 முறை அமைச்சர்களும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களும் மேஜையை தட்டி வரவேற்கிறார்கள். பேரவைத் தலைவர் பேசிய பிறகு, முதல்வர் ஜெயலலிதா பாராட்டுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இருகரம் கூப்பி வணங்குகிறார். எங்களை பொறுத்தவரை இந்த நிகழ்ச்சிகளை நாளைக்கு வைத்து இருக்கலாம்.

பேரவை கூட்டத்தொடரில் மதுவிலக்கை அமல்படுத்துவது குறித்து பேரவைத் தலைவரிடம் தனிநபர் தீர்மானம் எழுதி கொடுத்து இருக்கிறோம். செவ்வாய்க்கிழமையே விவாதிக்க வேண்டும் என்றார்.

விஜயதாரணி (காங்கிரஸ்): காங்கிரஸ் கட்சி சார்பிலும் மதுவிலக்கு தொடர்பாக, தனிநபர் மசோதா கொடுத்து உள்ளேன். செவ்வாய்க்கிழமையன்று மற்ற அலுவல்களை ஒத்தி வைத்து மதுவிலக்கு தொடர்பாக விவாதம் செய்ய கேட்டு உள்ளோம். வெங்காய விலை உயர்வு மின்கட்டணம், பால்விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்தும் சட்டசபையில் பேசுவோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com