பழனியில் அதிமுகவினர் கொண்டாட்டம்
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பழனி நகரம் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில்


பழனியில் நகரம் மற்றும் ஒன்றியப் பகுதிகளில் ஸ்ரீரங்கம் வெற்றியை அதிமுகவினர் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பழனி நகரம் மற்றும் ஒன்றியப்பகுதிகளில் அதிமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். பழனி நகர கழகம் சார்பில் பேருந்து நிலையம் முன்பு சட்டமன்ற உறுப்பினர் வேணுகோபாலு தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்புக்கள் வழங்கியும் கொண்டாடினர். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் ஆறுமுகம், தொகுதி செயலாளர் மகுடீஸ்வரன், நகர்மன்ற துணைத் தலைவர் முருகானந்தம், மாவட்ட மாணவரணி செயலாளர் அன்வர்தீன், தாராபுரம் பெரியசாமி, பாலசமுத்திரம் பேரூராட்சி துணைத் தலைவர் சக்திவேல், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஹக்கீம், எம்ஜிஆர் பேரவை ராஜாமுகமது, சேக் முகமது, மாணவரணி ஒன்றிய செயலாளர் சதீஷ், அப்பன், கூட்டுறவு சங்க தலைவர் பால்ராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். நெய்க்காரபட்டியில் ஒன்றியகழகம் சார்பில் ஒன்றியசெயலாளர் ஆறுமுகம் தலைமையில் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கினார். நெய்க்காரபட்டி பேரூராட்சி தலைவர் விஜயசேகர், துணைத் தலைவர் ரமாபிரபா மகேஸ், கவுன்சிலர்கள் பாபு, ஜின்னா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆயக்குடி பேரூராட்சி சார்பில் பேருந்து நிறுத்தம் அருகே பேரூர் செயலாளர் கருப்புச்சாமி தலைமையில் கட்சியினர் பட்டாசு வெடித்தனர்.
நிகழ்ச்சியில் ஆயக்குடி பேரூராட்சி தலைவர் சுந்தரம், அம்மா பேரவை சுலைமான் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...