தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த தம்பதியர் சிவக்குமார், லதா(42). இவர்களுக்கு திருமணமாகி கடந்த 20 வருடங்களாக குழந்தை இல்லாத நிலை நீடித்துள்ளது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லதாவுக்கு மார்பகப்புற்று நோய் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை மேற்கொண்டு லதா புற்றுநோயில் இருந்து மீண்டுள்ளார். எனினும் குழந்தை இல்லாத நிலையில் டெஸ்ட்டியூப் சிகிச்சைக்கு பழனி ஐஸ்வர்யா கருத்தரித்தல் மைய இயக்குனர் சந்திரலேகாவிடம் தம்பதியர் ஆலோசனை பெற்றுள்ளனர். இதைத் தொடர்ந்து அவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பல்வேறு சிகிச்சைகளின் முடிவில் அவர்களுக்கு கடந்த சிலதினங்களுக்கு முன்பு இரண்டரை கிலோ எடையில் ஆண்குழந்தை பிறந்துள்ளது.