/

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்து கோரி ச.ம.க. ஆர்பாட்டம்

முல்லைப் பெரியாறு அணையில் கேரள போலீஸ்சுக்கு மாற்றாக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸாரை  ஈடுபடுத்த வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கம்பத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

News image
Updated On :10 ஜூலை 2015, 2:16 pm

அறிவழகன்

முல்லைப் பெரியாறு அணையில் கேரள போலீஸ்சுக்கு மாற்றாக பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படை போலீஸாரை  ஈடுபடுத்த வலியுறுத்தி அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில் கம்பத்தில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கம்பம் தலைமை தபால் நிலையம் எதிரே அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பில் மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கரு.நகராஜன் தலைமை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர்  ஆர் ஜெயபிரகாஷ், மாவட்ட செயலாளர் வி.ஏ.முருகன், கம்பம் ஒன்றிய செயலாளர் அல்லிபாலா, நகர செயலாளர் செல்வராமர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் கேரள அரசை கண்டித்தும், அணைக்கு பாதுகாப்பு மத்திய தொழில் பாதுகாப்பு படையை ஈடுபடுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்னர் மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜ் பேசியதாவது:- முல்லைப் பெரியாறு அணையில் பல்வேறு இடையூறுகளுக்கு இடையில் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், அதை செயல்படுத்த முடியாமல் தடுத்து கேரள அரசு தனிச்சட்டம் கொண்டுவந்தது,

மீண்டும் சட்டப் போராட்டம் நடத்தி ஆய்வு நடத்தி மீண்டும் அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தி கொள்ள உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பேபி அணையை பலப்படுத்தி பின்னர் அணையின்  நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தி கொள்ளும் வசதியும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் தெரிவித்துள்ளது. அதை செயல்படுத்த விடாமல் கேரள அரசு தடுத்து வருகிறது.

மேலும், புதிய அணை என்ற பெயரில் கேரளாவில் அனைத்து கட்சிகளும் தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் அனைத்து கட்சிகளும் தனித்து செயல்பட்டு வருகிறோம். மத்திய அரசு முல்லைப் பெரியாறு அணை, பேச்சிபாறை, ஆழியாறு உள்ளிட்ட கேரளா-தமிழக எல்லை அணைகள் பாதுகாப்பு குறைபாடு உள்ளதாக மத்திய புலனாய்வு துறை, நுண்ணறிவு பிரிவினர் அறிக்கை அளித்துள்ளனர். மேலும், கேரளாவில் நக்ஸைலைட்கள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.

இதை புரிந்து கொள்ளாமல் மத்திய அரசு உச்சநீதிமன்ற உறுதிமொழியில் சம்பந்தப்பட்ட மாநில அரசு கேட்டால் மட்டுமே மத்திய தொழில் பாதுகாப்பு அளிக்க முடியும் என்று தெரிவித்து, மத்திய புலனாய்வு துறை அறிக்கையை காற்றி பறக்க விட்டு தமிழகத்திற்கு துரோகம் செய்துள்ளது. எனவே, மத்திய அரசு உடனடியாக முல்லைப் பெரியாறு அணைக்கு பாதுகாப்பு பணியில்  மத்திய தொழில் பாதுகாப்பு படை நியமிக்க வேண்டும் என்று பேசினார். உத்தமபாளையம் ஒன்றிய செயலாளர்  மகிமைராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.