தேக்கடி ஏரியில் சுற்றுலாப்பயணிகளுடன் சவாரி சென்ற கேரள வனத்துறைக்கு சொந்தமான படகு, திங்கட்கிழமை இயந்திரத் கோளாரின் காரணமாக நடுவழியில் அடர்ந்து வனப்பகுதியி்ல நின்றது. பயணிகளுடன் நின்ற படகை மற்றொரு படகு மூலம் பாதுகாப்பாக கரைக்கு கட்டி இழுத்து வந்தனர்.
தேக்கடி சர்வதேச சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும், பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகின்றனர். தேக்கடியில் யானை சவாரி, டைகர்வுயூ, நேச்சர்வாக், பார்டர்வாக், மூங்கில் படகு சவாரி என பல பொழுதுபோக்கு அம்சங்கள் இருந்தாலும், முல்லைப் பெரியாறு அணை நீர் தேக்கத்தில் படகுச்சவாரியின் போது நீர்நிலைகளுக்கு வரும் யானைகள், மான்கள், காட்டெருமை கூட்டங்கள் மற்றும் பல்வேறு வகையான பறவையினங்களையும் காணலாம் என்பதால், இங்கு சுற்றுலாப்பயணிகள் ஆர்வமாக படகு சவாரி செய்து வருகின்றனர்.
தேக்கடியில் கேரளசுற்றுலா வளர்ச்சிக்கழகம் மற்றும் வனத்துறை யினரின் பதினொரு படகுகள் சவாரிக்கென இருந்தது. கடந்த 2009-ல் தேக்கடியில் நடந்த படகு விபத்துக்குப்பின், கேரளசுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஜலராஜா, ஜலஜோதி, ஜலதரங்கிணி, வனத்துறையினரின் பெரியார், வனஜோல்சனா என ஐந்து படகுகளை மட்டுமே தற்போது இயக்கப்படுகிறது.
இந்நிலையில், திங்கட்கிழமை மாலை வெளிநாட்டுப்பயணிகள், பெண்கள், குழந்தைகள் உட்பட முப்பது பேருடன் தேக்கடி முல்லைப் பெரியாறு ஏரியல் சவாரி சென்ற கேரள வனத்தறையினரின் வனஜோல்சனா படகு, திரும்பி வரும் வழியில், பெரியாறு புலிகள் சரணாலயப்பகுதியிலுள்ள மனக்கவலை என்ற இடத்தில் பம்ப் தகறாறு காரணமாக நடுவழியில் நின்றது. சுமார் இரண்டு மணி நேரம் புலிகள், யானைகள் உட்பட வனவிலங்குகள் நிறைய பகுதியில் பழுதாகி நினறதால் சுற்றுலா பயணிகள் அச்சத்தில் பரிதவித்து போனார்கள்.
பின்னர், துகுறித்து படகு ஊழியர்கள் கொடுத்த தகவலைத்தொடர்ந்து, வனத்துறையினரின் மற்றொரு படகான பெரியார் சம்பவ இடத்துக்கு கொண்டுவரப்பட்டு சுற்றுலாப்பயணிகளை மீட்டு, பழுதான படகை படகுத்துறைக்கு கட்டி இழுத்து வந்தது.
இதுகுறித்து படகு ஓட்டுனர் கூறுகையில்:- படகின் பேன் பெல்ட், மற்றும் பம்ப் பெல்ட் கட்டானதால் படகின் எஞ்சின் ஓட்டம் நின்றது. உடனடியாக படகை ஓரமாக ஒதுக்கி நிறுத்தினோம். மற்றொரு படகு வந்து இப்படகை கட்டி இழுத்து பத்திரமாக கரைசேர்த்தது, ஏற்கனவே இந்தப்படகில் வேலை இருப்பது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்திருந்தோம் என்றார்.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்:- வனத்துறையின் ஒருபடகில் பழுதுபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. அது முடிந்தவுடன் வனஜோல்சனா படகை மராமத்து பணிக்காக கரை ஏற்ற முடிவு செய்திருந்தோம் என்றனர்.
இந்த படகு பழுதாகி நின்ற இடத்திற்கு அருகில்தான் கடந்த 2009 ல் கேரள சுற்றுலா வளர்ச்சிக்கழகத்தின் ஜலகன்னிகா படகு கவிழ்ந்து 45 பயணிகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.