சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பாகுபலி திரைபடம் தடை செய்யக் கோரி நெல்லையில் திரையரங்கு முற்றுகை: 21 பேர் கைது

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

News image
Updated On :17 ஜூலை 2015, 7:33 am

ஷேக் அப்துல்காதர்

திருநெல்வேலியில் வெள்ளிக்கிழமை பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆதித்தமிழர் கட்சியினர் 21 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் பாகுபலி திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் இறுதிக் காட்சியில் பகடை என புனைப்பெயரில் அழைக்கப்படும் அருந்ததியர் சமுதாயம் குறித்து அவதூறாக வசனங்கள் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

ஆகவே பாகுபலி திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஆதித்தமிழர் கட்சியினர் வெள்ளிக்கிழமை திருநெல்வேலி நகரில் உள்ள ரத்னா திரையரங்கை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்துக்கு கட்சியின் மாநகர் மாவட்டச் செயலர் இரா. இளஞ்செழியன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் கு.க. கலைக்கண்ணன் முன்னிலை வகித்தார். மாநில இளைஞரணி செயலர் மு. கதிரவன், மாவட்டத் தலைவர் காலேப், மாவட்ட அமைப்புச் செயலர் கருமுகிலன், மாவட்ட கொள்கைபரப்பு செயலர் வீரபாண்டியன், மாவட்ட இளைஞரணி செயலர் சண்முகம், மாவட்ட மகளிரணி செயலர் மீனாட்சி மற்றும் 2 பெண்கள் உள்பட 21 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.