/

கம்பத்திலிருந்து கேரளாவுக்கு கஞ்சா கடத்தல்: பள்ளிமாணவன் உட்பட 4 பேர் கைது

கம்பத்திலிருந்து கஞ்சா வாங்கி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற கேரள பள்ளி மாணவன் உட்பட 4 பேர்களை குமுளியில் கேரள போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :24 ஜூலை 2015, 12:18 pm

அறிவழகன்

கம்பத்திலிருந்து கஞ்சா வாங்கி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்ற கேரள பள்ளி மாணவன் உட்பட 4 பேர்களை குமுளியில் கேரள போலீஸார் கைது செய்தனர்.

கேரள கலால் துறை சிறப்பு ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படை கடந்த சில நாட்களாக குமுளியில் கஞ்சா வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். வியாழக்கிழமை இத்தனிப்படையினர் குமுளியில் கேரள தமிழ்நாடு எல்லைப் பகுதியான ரோசாப்பூ கண்டம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வனப்பகுதி வழியாக வந்த இரண்டு வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் அழைத்து சோதனை செய்தபோது அவர்களிடம் அரைகிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

விசாரணையில் இவர்கள் ஆலப்புழை அரூர் பகுதியைச்சேர்ந்த சேதுமோன்(19), ஜித்து(19) என்றும், வெல்டிங் தொழிலாளிகளான இவர்கள் கேரளாவில் கஞாசவின் விலை அதிகம் என்பதால் சொந்த உபயோகத்திற்காக கம்பத்தில் கஞ்சாவை வாங்கி, குமுளி தமிழக பஸ்நிலையத்தில் இறங்கி, போலீசாரின் சோதனையிலிருந்து தப்பிக்க வனப்பகுதி வழியாக கேரளப்பகுதிக்குள் சென்றதும் தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸார் இருவரையும் கைது செய்தனர்.
       
இதே நேரத்தில் குமுளி கேரள கலால் துறை சோதனைச்சாவடியில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகப்படும்படி வந்த மாணவன் மற்றும் வாலிபர் ஒருவரையும் நிறுத்தி சோதனை செய்தனர். இவர்கள் இருவரிடமும் அரை கிலோ கஞ்சா இருந்தது. விசாரணையில் கோட்டயம் மணர்காட்டைச் சேர்ந்த சச்சின்(19) மற்றும் அங்குள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் குமார்(17) (பெயர் மாற்றப்பட்டள்ளது) எனத்தெரிய வந்தது.

மேலும் இவர்கள் கமப்தில் கஞ்சா வாங்கியதாகவும், ஏற்கனவே ஒருமுறை இதுபோல் கஞ்சா  வாங்கிச் சென்றுள்ளதாகவும் போலீஸாரிடம் தெரிவித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.