உத்தமபாளையம் அருகே சூறாவளிகாற்றுடன் பலத்தமழை
உத்தமபாளையம் அருகே சூறாவளிகாற்றுடன் பலத்தமழையால் ஆனைமலையன்பட்டி கிராமத்தில் வீடுகளின் மேற்கூறை, வாழை, தென்னை, மரங்கள் வேரோடு சாய்ந்தது,


உத்தமபாளையம் அருகே சூறாவளிகாற்றுடன் பலத்தமழையால் ஆனைமலையன்பட்டி கிராமத்தில் வீடுகளின் மேற்கூறை, வாழை, தென்னை, மரங்கள் வேரோடு சாய்ந்தது, மின்கம்பங்களும் சாய்ந்ததால் இருளில் மூழ்கியது.
உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டி, கோகிலாபுரம், ஆனைமலையன்பட்டி, ராமசாமி நாயக்கன்பட்டி, உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை மாலை இரண்டு மணி நேரம் வரை சூறாவளி காற்றுடன் இடி மின்னல்லுடன் பலத்த மழை பெய்ததது. இதில் ஆனைமலையன்பட்டி கிராமத்தை மற்றும் புரட்டி போட்டது போல் 30-க்கும் மேற்பட்ட வீடுகளின் மேற்கூரைகள் காற்றில் பறந்தது காற்றின் வேகத்தில் தகரங்கள் தெருக்களில் பறந்து விழுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ள வீட்டை விட்டு வெளியே வந்தனர். இதேபோல் 10 க்கும் மேற்பட்ட பெரிய தென்னை மரங்கள் வேரோடு சாய்தது, தெருக்களில் இருந்து 7 மின்கம்பங்கள் குறுக்கே ஒடிந்து விழுந்தது, மரம், மற்றும் மின்கம்பங்கள் விழுந்ததில் வீடுகள், அரசு கள்ளர்பள்ளி, மற்றும் அரசு கட்டிடங்கள் சேதம் அடைந்ததுள்ளது. இதே பகுதியில் உள்ள ஒரு தனியார் கிட்டங்கியின் சுற்று சுவர் சரிந்து விழுந்தது. இக்கிராமத்தை சேர்ந்த சுந்தாயம்மாள், மொக்கராஜ், கோட்டைசாமி, நல்லுகாமு, ரவி உள்ளிட்ட 30 வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்ததுள்ளது.
மேலும், இந்த பகுதியில் உள்ள வாழைதோட்டங்களில் சுமார் 5 ஆயிரத்துக்கும் அதிகமான வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தது. மின் கம்பங்கள் ஒடிந்ததால் இரவு முழுவதும் மின்சாரம் இல்லாமல் கிராமல் இருளில் மூழ்கியுள்ளது. பாதிப்பு குறித்த தகவல் அறிந்ததும், உத்தமபாளையம் வட்டாட்சியர் சேகர் தலைமையில் வருவாய்துறையினர், மற்றும் ஆனைமலையன்பட்டி ஊராட்சிதலைவர் ரவி தலைமையில் உள்ளாட்சி பிரதநிதிகள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்னர். தொடர்ந்து மேற்கூரை சேதம் அடைந்த வீடுகளில் வசிக்கும் பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...