அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

காவல்நிலையத்தில் தகராறில் ஈடுபட்ட ஊராட்சி மன்றத் தலைவர் கைது

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் மது போதையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆத்திபட்டி

News image
Updated On :29 நவம்பர் 2015, 2:57 pm

கோ.ஜெயக்குமார்

விருதுநகர் மாவட்டம், கிருஷ்ணன்கோவில் காவல் நிலையத்தில் மது போதையில் போலீஸாருடன் தகராறில் ஈடுபட்டு, போலீஸாருக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவரை போலீஸார் கைது செய்தனர்.

அருப்புக்கோட்டை, கட்டகஞ்சன்பட்டியைச் சேர்ந்தவர் வரதராஜன் மகன் கோவிந்தராஜன் (39). இவர் ஆத்திபட்டி ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளார்.

கிருஷ்ணன்கோவில், காவல் நிலையம் அருகேயுள்ள ஆர்.பி.ஆர்.டிரஸ்ட் உரிமையாளர் ராம்பிரபு என்பவர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுக்க கோவிந்தராஜன் காவல் நிலையம் வந்துள்ளார்.

சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன் புகார் மனுவை பெற்றுக் கொண்டு, மனு ரசீது தயார் செய்து அதில் கோவிந்தராஜனிடம் கையொப்பம் கேட்டுள்ளார். அப்போது கோவிந்தராஜ், கையெழுத்து போட மறுத்து, நீங்கள் லட்சக்கணக்கில் எதிர் தரப்பிடம் பணம் பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்க மறுக்கிறீர்கள். உங்களை கொன்றால்தான் திருந்துவீர்கள் என்று கூறி மிரட்டி, அரசுப் பணி செய்யவிடாமல் தடுத்தாராம்.

இது குறித்து சிறப்பு சார்பு ஆய்வாளர் கணேசன், காவல் நிலையத்தில் புகார் செய்தார். காவல் ஆய்வாளர் வேணுகோபால் வழக்குப் பதிவு ஊராட்சி மன்றத் தலைவர் கோவிந்தராஜனைக் கைது செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.