நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடிப்பு:அடவிநயினார் அணை நீர்மட்டம் உயர்வு
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக நீடித்து வரும்....


மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக நீடித்து வரும் மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் அணைகளின் நீர்பிடிப்பு பகுதியில் சில தினங்களாக மழை நீடித்து வருகிறது. புதன்கிழமை காலை நிலவரப்படி பாபநாசம் அணை, சேர்வலாறு, கடனாநதி, குண்டாறு அணைகளில் தலா 1 மி.மீ, ராமநதி அணையில் 18 மி.மீ, கருப்பாநதி அணையில் 13 மி.மீ, அடவிநயினார் அணையில் 10 மி.மீ, கொடுமுடியாறு அணையில் 5 மி.மீ மழையும் பெய்துள்ளது.
இதேபோல் தென்காசியில் 20 மி.மீ, செங்கோட்டையில் 2.3 மி்.மீ, ஆய்க்குடியில் 40.8 மி.மீ, ஆலங்குளத்தில் 37.2 மி.மீ, அம்பாசமுத்திரத்தில் 1.2 மி.மீ, ஸ்ரீவைகுண்டத்தில் 8 மி.மீ, சேரன்மகாதேவி, நான்குனேரி, கன்னடியன் அணைக்கட்டில் தலா 2 மி.மீ மழை, சங்கரன்கோவிலில் 22 மி.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் நீர்பிடிப்பு பகுதியில் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தை அடுத்து நீர்மட்டமும் உயர்ந்துள்ளது. பாபநாசம் அணைக்கு விநாடிக்கு 500 கனஅடி, மணிமுத்தாறு அணைக்கு 119 கனஅடி, கடனாநதி அணைக்கு 61 கனஅடி, ராமநதி அணைக்கு 20 கனஅடி, கருப்பாநதி அணைக்கு 10 கனஅடி, அடவிநயினார் அணைக்கு 50 கனஅடி, கொடுமுடியாறு அணைக்கு 25 கனஅடியும் நீர்வரத்து இருந்தது.
மழை நீடித்து வருவதால் பாபநாசம், சேர்வலாறு அணைகளிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 340 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 2 அடி உயர்ந்து 58 அடியாகவும், கடனாநதி அணையின் நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 32.90 அடியாகவும் இருந்தது.
பாபநாசம் அணையின் நீர்மட்டம் 56.55 அடி, சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 69.88 அடி, மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 57.80 அடி, ராமநதி அணையின் நீர்மட்டம் 37.75 அடி, கருப்பாநதி அணையின் நீர்மட்டம் 52.50 அடி, அடவிநயினார் அணையின் நீர்மட்டம் 58.00 அடி, கொடுமுடியாறு அணையின் நீர்மட்டம் 10.00 அடி, வடக்குப் பச்சையாறு அணையின் நீர்மட்டம் 23.37 அடியாகவும் இருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...