நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்த கவிஞர் பி.கே.முத்துசாமிக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் அறிவிக்கப்பட்ட ரூ.5 லட்சம் நிதி, மாதாந்திர ஊக்கத்தொகை திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
ராசிபுரம் அருகேயுள்ள ஆர்.புதுப்பட்டியைச் சேர்ந்தவர் கவிஞர் பி.கே.முத்துசாமி (96).
சுதந்திர போராட்ட காலங்களில் பல்வேறு மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
அண்ணா அறுபது, பெரியார் புரட்சி காப்பியம், புரட்சித் தலைவியின் புரட்சி காப்பியம், புரட்சித் தலைவி அந்தாதி போன்ற நூல்களையும், பெரியார், அண்ணா, எம்ஜிஆர். போன்றோரைப் பாராட்டி தனித்தனியே வெண்பாக்களையும் எழுதியுள்ளார்.
15 ஆயிரம் வெண்பாக்களையும், 1000-க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.
பி.கே.முத்துசாமியின் தமிழ்ப் பணியைப் பாராட்டி, டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவியும், மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகையும் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
இதையடுத்து, தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஆர்.வைத்திலிங்கம், பி.தங்கமணி ஆகியோர் ஆர்.புதுப்பட்டியில் உள்ள பி.கே.முத்துசாமியின் இல்லத்துக்கு திங்கள்கிழமை நேரில் சென்றனர். அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் முத்துசாமியிடம் ஜெயலலிதா அறிவித்த ரூ.5 லட்சம் நிதி, மாதாந்திர ஊக்கத்தொகையை வழங்கினர்.
அப்போது கவிஞர் பி.கே.முத்துசாமி மற்றும் அவரது குடும்பத்தினர் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணிரத்னம் - விஜய் சேதுபதி திரைப்படத்தின் ஓடிடி உரிமையைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம்!

கணினி, செய்யறிவு கண்காணிப்பு தனிமனிதனை பாதிக்குமா?

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - பட்டதாரிகளுக்கு நல்ல வாய்ப்பு!
விடியோக்கள்

ஆட்சியை தக்க வைக்க TVK மெகா (கூட்டணி) PLAN | CM Vijay | TVK | VCK |Congress | IUML | MDMK

இருட்டில் அதிமுக...காரணம் யார் ? | Journalist Durai karuna Interview | CM Vijay | TVK | ADMK | SP Velumani | EPS

இரண்டே நாள்தான்: பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் போகும் ஃபிபா | FIFA | FIFA World Cup |



