கூடலூர் நெடுஞ்சாலையில் தார் சாலை போடாதை கண்டித்து பெண்கள் திடீர் சாலை மறியல்
பாலம் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சாலைப்பணி, பலமாதங்களாக மீண்டும் போடாததை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலை பெண்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.


பாலம் பணிக்காக நிறுத்தி வைக்கப்பட்ட சாலைப்பணி, பலமாதங்களாக மீண்டும் போடாததை கண்டித்து வெள்ளிக்கிழமை மாலை பெண்கள் திடீர் சாலை மறியல் செய்தனர்.
கம்பம் குமுளி தேசிய நெடுஞ்சாலையில், கூடலூர் வடக்கு காவல் நிலையம் அருகே குறுகலான பாலம் இடிக்கப்பட்டு, புதிய பாலம் கட்டும் பணி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. பாலம் பணி நடைபெறுவதால், அதை ஒட்டி சுமார் 500 மீட்டர் தூரம் மட்டும் சாலை அமைக்காமல், மீதமுள்ள பகுதி எல்லாம் நெடுஞ்சாலைத்துறை சார்பாக புதிய தார்சாலை அமைக்கப்பட்டது.
பாலம் கட்டும் பணி முடிந்து நாட்கள் பல கடந்தும் கூடலூர் வடக்கு காவல் நிலையத்திலிருந்து கள்ளர் பள்ளிவரையிலும் இன்னும் சாலை போடாமல், மண்மட்டுமே போட்டு உள்ளனர். வாகனங்கள் இந்த வழியாக செல்லும் நேரம், தறையிலிருந்து வெளியேறும் தூசி அப்பகுதியிலிருக்கும் வீடு முழுவதும் சென்று படிகிறது.
இதனால் இப்பகுதியில் உள்ள முதியவர்கள் முதல் குழந்தைகள் வரை கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியவில்லை. இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறையிடம் தெரிவித்தும் எந்தநடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் வெள்ளிக்கிழமை மாலை அப்பகுதியிலுள்ள பெண்கள் அரசமரம் பகுதியில் நெடுஞ்சாலையில் கற்களை போட்டு போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தி, திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் கிடைத்ததும் கூடலூர் இன்ஸ்பெக்கடர் முத்துமணி மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருசில தினங்களில் நெடுங்சாலைத் துறையினரிடம் சொல்லி சாலை போடுவதாக உறுதி அளித்ததனி பேரில் பெண்கள் கலைந்து சென்றனர். பெண்களின் இந்த திடீர் சாலை மறியலால் கூடலூர்-கம்பம், கம்பம்-குமுளி பஸ்போக்குவரத்து சுமார் அரைமணிநேரம் தடைபட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...