ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

இலுப்பூர் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் பூட்டை உடைத்து திருட்டு 

இலுப்பூர் அருகேயுள்ள பாத்திமாநகரில் திங்கள்கிழமை இரவு அடுத்ததடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

News image
Updated On :2 ஆகஸ்ட் 2016, 9:13 am

சி. உதயகுமார்

விராலிமலை: இலுப்பூர் அருகேயுள்ள பாத்திமாநகரில் திங்கள்கிழமை இரவு அடுத்ததடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து தங்கநகைகளை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலிஸார் தேடி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகேயுள்ள பாத்திமாநகர் பகுதியைச் சேர்ந்தவர் தா.கவிதா(30) இவர் நேற்றிரவு தனது தாய் வீட்டுக்கு வீட்டுக்குச் சென்றிருந்தாராம். செவ்வாய்க்கிழமை காலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததாம்.

மேலும், பீரோவில் இருந்த தங்க நகை 17 சவரன் திருடுபோனது தெரியவந்ததாம். இவர்களது பக்கத்து வீட்டைச் சேர்ந்த இ. அப்துல்லா(37) திங்கள்கிழமை ஊருக்குச் சென்றிருந்தார். அவரது வீட்டின் பூட்டையும் உடைத்த கொள்ளையர்கள், அங்கிருந்த 10 சவரன் தங்க நகையை திருடிச் சென்றுள்ளனர். 

இதுகுறித்த தனித்தனி புகார்களின்பேரில் இலுப்பூர் காவல் உதவி ஆய்வாளர் டி. ஜெயராம் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.