/

கவுண்டம்பாளையம் சாராயக்கடையை அகற்றக் கோரி கருப்பு கொடி ஏற்றி போராட்டம்: 100 பேர் கைது

புதுச்சேரியில் கவுண்டன்பாளையம் சாராயக்கடையை அகற்றக்கோரி, கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

News image
Updated On :8 ஜூலை 2016, 12:02 pm

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் கவுண்டன்பாளையம் சாராயக்கடையை அகற்றக்கோரி, கடைகளை அடைத்து கருப்பு கொடி ஏற்றி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை போலீசார் கைது செய்தனர்.

அரசு கலால்துறை கட்டுபாட்டில் கீழ் சாராயக்கடை, கள்ளுக்கடை இயங்கி வருகிறது. கூலித்தொழிலாளிகள், வெளியூரை சேர்ந்தவர்களுக்கு இவற்றுக்கு காலையிலேயேல வந்து விடுகின்றனர்.

இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வழுதாவூர் சாலையில் அடிக்கடி வாகன விபத்துகளும் நேரிடுகின்றன. எனவே 40 ஆண்டுகளாக கவுண்டன்பாளையத்தில் இயங்கி வரும் சாராயக்கடையை உடனே அகற்றுமாறு பொதுமக்கள், வியாபாரிகள் கலால்துறைக்கு மனுகொடுத்தனர்.

இதற்கு எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், சாராயக்கடை எதிர்ப்பு போராட்டக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கவுண்டன்பாளையம் சாராயக்கடை எதிரில் வியாபாரிகள், பொதுமக்கள், அரசியல் கட்சியினர் என சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தை முன்னிட்டு வழுதாவூர் சாலைலயில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டு, கடை முன்பு கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பை வியாபாரிகள் வெளிகாட்டினர்.

அப்போது அங்கு வந்த கோரிமேடு போலீசார், போராட்டம் நடத்துவதற்கு அனுமதியில்லை என்றும், நீங்கள் கலைந்து செல்லுங்கள் என்று கூறினர். இதற்கு மறுப்பு தெரிவித்து அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் இரு தரப்பினர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்து, உண்ணாவிரத போராட்டத்திற்காக போடப்பட்டு இருந்த பந்தலையும் அகற்றினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.