சென்னையில் இருந்து மதுரை, கோவை, ஹவுரா இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.இது குறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
மதுரை - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்
ரயில் எண் 06020: ஜூலை 22,29 ஆம் தேதிகளில் மதுரையில் இருந்து காலை 10 மணிக்கு புறப்பட்டு மாலை 6.50 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும்.
ரயில் எண் 06019: ஜூலை 25, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் சென்னை எழும்பூரில்
இருந்து காலை 6.15 மணிக்கு புறப்பட்டு பிற்பகல் 3 மணிக்கு மதுரை சென்றடையும்.
இந்த ரயில் கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி, ஸ்ரீரங்கம், லால்குடி, அரியலூர், விருதாசலம், விழுப்புரம், திண்டிவனம், மேல் மருவத்தூர், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
கோவை - சென்னை சென்ட்ரல்
ரயில் எண் 06022: ஜூலை 22, 29 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து காலை 11 மணிக்கு புறப்பட்டு இரவு 7.35 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
ரயில் எண் 06021: ஜூலை 25, ஆகஸ்ட் 1 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு கோவை சென்றடையும்.
இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம், மொரப்பூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, குடியாத்தம், காட்பாடி, வாலாஜா சாலை, அரக்கோணம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்,
சென்னை சென்ட்ரல் - ஹவுரா ஏசி சிறப்பு ரயில்
ரயில் எண் 00842: ஆகஸ்ட் 7, 28 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹவுரா சென்றடையும்.
இந்த ரயில் நல்லூர்ஸ விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விசகாப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புபனேஷ்வர், கட்டக், பாத்ராக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








