/

புதுச்சேரியில் சிபிஐ, முதியோர் வழக்குகளுக்கு தனி நீதிமன்றம்

புதுச்சேரியில் சிபிஐ வழக்குகள், முதியோர் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளுக்கு தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

News image
Updated On :23 ஜூலை 2016, 4:33 pm

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் சிபிஐ வழக்குகள், முதியோர் பிரச்னைகள் தொடர்பான வழக்குகளுக்கு தனி நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும் என முதல்வர் வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தென்மாநில சட்டப்பணிகள் ஆணைய சீராய்வு மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:

நீதிமன்றங்களில் வழக்குகள் தேங்கி இருப்பதால் பொதுமக்களுக்கு பரிகாரம் கிடைப்பதற்கு நீண்ட நாள்களாகிறது. குற்றம், சிவில், மோசடி, வாகன விபத்து வழக்குகளில் தீர்வு கிடைக்க பல காலம் காத்திருக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற சூழலில் சட்டப்பணிகள் ஆணைய சேவை மிகவும் அவசியமாகிறது. வாகன விபத்து வழக்குகளில் பாதிக்கப்பட்டோருக்கு முழுமையான இழப்பீடே கிடைப்பதில்லை. வழக்குரைஞர் கட்டணம், இடையில் செயல்படுவோருக்கு கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது.

சிபிஐ வழக்குகள், முதியோர் வழக்குகளுக்கான தனி நீதிமன்றங்களை ஏற்படுத்தப்படும். நீதித்துறைக்கு என 39 அலுவலர்கள் யுபிஎஸ்சி மூலம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

நீதித்துறைக்கு தேவையான உதவிகளை புதுவை அரசு செய்யும் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.