ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலை அருகே ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்து நாசம்: 27 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்

மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு வந்த தனியார் ஆம்னி பேருந்து, நள்ளிரவில் விராலிமலை அருகில் தீப்பிடித்து எரிந்து நாசம் அடைந்தது.

News image
Updated On :30 ஜூலை 2016, 9:02 am

சி. உதயகுமார்

விராலிமலை: மதுரையில் இருந்து வெள்ளிக்கிழமை புறப்பட்டு வந்த தனியார் ஆம்னி பேருந்து, நள்ளிரவில் விராலிமலை அருகில் தீப்பிடித்து எரிந்து நாசம் அடைந்தது. இந்த விபத்தில் பேருந்தில் வந்த 27 பயணிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மதுரையில் இருந்து சென்னைக்கு வெள்ளிக்கிழமை 10.45 மணிக்கு புறப்பட்ட படுக்கை வசதி கொண்ட(பெர்த்) தனியார் ஆம்னி பேருந்தை ராமநாதபுரத்தையைச் சேர்ந்த ஓட்டுநர் எ. இலங்கேஸ்வரன்(38) ஓட்டி வந்தார். விராலிமலை அருகே புதுப்பட்டி பிரிவு சாலை அருகே பேருந்து வந்த போது நள்ளிரவு 12 மணியளவில் பஸ் என்ஜினில் புகை வருவதைக் கண்ட டிரைவர் சாலையோரமாக பேருந்தை நிறுத்தினார்.

பின்னர், பேருந்தில் தூங்கிக் கொண்டு இருந்த பயணிகளை எழுப்பி அனைவரையும் பேருந்தில் இருந்து உடனடியாக இறங்குமாறு எச்சரித்தார். பயணிகள் அனைவரும் தங்களது உடமைகளை எடுத்துக் கொண்டு பஸ்ஸில் இருந்து இறங்கினர்.

அடுத்த சில நொடிகளில் பஸ் தீப்பிடித்து மளமளவென எரிந்தது. இதில் பேருந்து முழுவதும் எரிந்து நாசம் அடைந்தது. மின்ஒயரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பஸ் தீப்பிடித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.