ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

குளத்தை காணவில்லை: அறிவிப்பு பலகையுடன் வந்த காந்தியவாதி

விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் குளத்தை காணவில்லை என்ற அறிவிப்பு பலகையுடன் வந்த காந்தியவாதியால் பரபரப்பு ஏற்பட்டது.

News image
Updated On :1 ஜூன் 2016, 7:33 am

சி. உதயகுமார்

விராலிமலை: விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் குளத்தை காணவில்லை என்ற அறிவிப்பு பலகையுடன் வந்த காந்தியவாதியால் பரபரப்பு ஏற்பட்டது.

விராலிமலை வட்டத்தில் 1425-ஆம் பசலிக்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தொடங்கியது. வருகிற 3-ஆம் தேதி வரை நடைபெறவுள்ள ஜமாபந்தியில் பல்வேறு ஊராட்சிகளைச் சேர்ந்த பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு, வருவாய்த் துறையினரின் ஆய்வுக்கு பின் தீர்வு காணப்பட உள்ளது.

கொடும்பாளூர் குருவட்டத்திற்குட்பட்ட 16 வருவாய் கிராமங்களுக்கு புதன்கிழமை ஜமாபந்தி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார்.

விராலிமலை வட்டாட்சியர் ஆர். சுவாமிநாதன் முன்னிலை வகித்தார். தலைமையிடத்து மண்டல துணை வட்டாட்சியர் ஜெ. சரவணசதிஷ்குமார், துணை வட்டாட்சியரும், வட்ட வழங்கல் அலுவலருமான வெள்ளைச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ஜமாபந்தி தொடங்கிய சிறிது நேரத்தில், கொடும்பாளூரைச் சேர்ந்த காந்தியவாதி என். செல்வராஜ் கொடும்பாளூரில் இருந்த சத்திரம் குளத்தை காணவில்லை என்றும் அக்குளத்தை கண்டுபிடித்து தருமாறு சைக்கிளில் அறிவிப்பு பலகையை  மாட்டிக்கொண்டு வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

இந்த மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் ஜமாபந்தி முடிந்த பிறகு, மேற்கண்ட மனு மீது நடவடிக்கை எடுப்பதாக காந்தியவாதி என். செல்வராஜிடம் உறுதி அளித்தார்.

இதுகுறித்து காந்தியவாதி என். செல்வராஜிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் சத்திரத்தின் ஊரின் மையப்பகுதியில் சுமார் 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த சத்திரம் குளம் மற்றும் குளத்தின் நடுவே இருந்த கிணறும் அப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை பெருமளவு பூர்த்தி செய்து வந்தது. தற்போது இக்குளம் ஆக்கிரமிப்பாளர்களால் முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு கிணற்றையும், குளத்தையும் காணவில்லை, இதுகுறித்து கடந்த பிப்ரவரி 2-ஆம் தேதி தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அனுப்பப்பட்டது அதனைத்தொடர்ந்து, அம்மனு மனு மீது நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி முதல்வரின் தனிப்பிரிவில் இருந்து எனக்கு கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது ஆனல் இதுவரை எவ்வித நடவடிக்கையும் நிர்வாகம் மேற்கொள்ளவில்லை மேலும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்காத பட்ச்சத்தில் வரும் ஆக, 11-ம் தேதி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அம்மனுவில் கூறியுள்ளார்.

தனியார் கல்லூரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வரும் காந்தியவாதி என். செல்வராஜ், இதற்குமுன் பூரண மதுவிலக்கு, வெள்ள சேதப்பகுதிகளில் மீட்பு பணி, வாக்காளர்கள் 100 சதம் பங்களிப்பு உள்ளிட்ட பல்வேறு சமுக பணிகளிகளில் ஈடுபட்டு பல கிலோ மீட்டர் சைக்கிள் பிரச்சாரம் மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.