/

சட்டப்பேரவையை புறக்கணித்த என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்

புதுச்சேரியில் சனிக்கிழமை கூடிய 14-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

News image
Updated On :11 ஜூன் 2016, 9:41 am

சுஜித்குமார்

புதுச்சேரி: புதுச்சேரியில் சனிக்கிழமை கூடிய 14-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தில் முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

கடந்த மே மாதம் நடைபெற்ற பேரவை பொதுத் தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 8 தொகுதிகளில் மட்டுமே வென்று தோல்வியை தழுவியது. காங்கிரஸ்-திமுக கூட்டணி ஆட்சியை பிடித்தது.

இந்நிலையில் சனிக்கிழமை நடைபெற்ற பேரவையின் முதலாவது கூட்டத்தில் 19-வது பேரவைத் தலைவராக வைத்திலிங்கம், துணைத் தலைவராக சிவக்கொழுந்து ஆகியோர் பதவியேற்றனர். அவர்களை அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏக்கள் வாழ்த்திப் பேசினர்.

இந்நிலையில் முக்கிய எதிர்க்கட்சியான என்.ஆர். காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி மற்றும் 8 எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பேரவையின் முதல் கூட்டத்திலேயே அவர்கள் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.