விராலிமலையில் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: ஓட்டுநர் சாவு
விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.


விராலிமலை: விராலிமலை அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு நேரிட்ட சாலை விபத்தில் அரசு பேருந்து ஓட்டுநர் உயிரிழந்தார்.
திருநெல்வேலியில் இருந்து 20 -க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்னை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது பேருந்தை திருநெல்வேலி மாவட்டம் துவரங்காடுவைச் சேர்ந்த ராமையா மகன் சுப்பிரமணியன்(32) ஓட்டினார்.
இந்த நிலையில், விராலிமலை அருகேயுள்ள கொடும்பாளூர் வாடியன்களம் என்ற இடத்தில் பேருந்து சென்ற போது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த அரசு பேருந்து ஓட்டுநர் சுப்பிரமணியன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மேலும், இப்பேருந்தில் பயணம் செய்த பயணிகள் திருநெல்வேலியைச் சேர்ந்த காந்திமதி(31),ரம்யா(21)முத்துகிருஷ்ணன்(55)கோபால்(27)வசந்தா(20)பாலசந்தர்(32) மற்றும் பாளையங்கோட்டை காந்திமதி(32), விருதுநகர் வரதராஜன்(20) உள்ளிட்டோர் காயங்களுடன் திருச்சி, மணப்பாறை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து விராலிமலை காவல் ஆய்வாளர் அ. மா. செந்தில்மாறன் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...