ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

விராலிமலையில் அதிர்ச்சி: பாதி எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கண்டெடுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பள்ளி மாணவியை கொன்று எரித்த மர்ம நபர்களை விராலிமலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

News image
Updated On :7 மே 2016, 5:20 am

சி. உதயகுமார்

விராலிமலை:  புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே பள்ளி மாணவியை கொன்று எரித்த மர்ம நபர்களை விராலிமலை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விராலிமலை- திருச்சி சாலை இ. மேட்டுப்பட்டி அருகே உள்ள காட்டுப்பகுதியில் சனிக்கிழமை காலை அவ்வழியே சென்றவர்கள் எரிந்த நிலையில் இளம் பெண்ணின் சடலம் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.இது குறித்து உடனடியாக விராலிமலை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

புதுக்கொட்டை எஸ். பி. தலைமையிலான காவல்துறை அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதில், எரிந்த மாணவி பெயர் ப. தேவி(17) என்றும், இவரது தந்தை பழனிச்சாமி, தாய் பாலமணி கடந்த 13 வருடங்களுக்கு முன் தற்கொலை செய்து இறந்துள்ளனர்.

அதன் பிறகு தேவி தனது தாய் மாமா செந்தில்(39) பராமரிப்பில் இருந்து வருகிறார். தற்போது திருச்சி மாவட்டம் அளுந்தூர் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளார். இந்த நிலையில், தேவியை மர்ம நபர்கள் கடத்தி வந்த கொலை செய்து காட்டுக்குள் வைத்து எரித்துச் சென்றிருக்கலாம் என்று தெரிகிறது. அவரை கொலை செய்தவர்கள் யார் என்பது குறித்து விராலிமலை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.