நெல்லித்தோப்பு: வேட்புமனு தாக்கல் செய்தார் நாராயணசாமி; நாளை மனுக்கள் பரிசீலனை
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் செய்ய இறுதி நாளான புதன்கிழமை காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான வி.நாராயணசாமி மனுத்தாக்கல் செய்தார்.


புதுச்சேரி: நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் வேட்பு மனுத்தாக்கல் தாக்கல் செய்ய இறுதி நாளான புதன்கிழமை காங்கிரஸ் வேட்பாளரும், முதல்வருமான வி.நாராயணசாமி மனுத்தாக்கல் செய்தார்.
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தல் வரும் 19-ம் தேதி நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சி சார்பில் முதல்வர் நாராயணசாமி, அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகர் போட்டியிடுகின்றனர்.
இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 26-ம் தேதி தொடங்கியது. இதுவரை அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர், அவருக்கு மாற்று வேட்பாளர் தமிழ்ச்செங்கோலன் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி புதன்கிழமை தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி மலர்க்கண்ணனிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். அவருக்கு மாற்று வேட்பாளராக தாக்கல் செய்தார்.
மாநில காங்கிரஸ் தலைவர் ஏ.நமச்சிவாயம், அமைச்சர்கள் கந்தசாமி, கமலக்கண்ணன், ஷாஜஹான் திமுக அமைப்பாளர் இரா.சிவா எம்.எல்.ஏ. முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தேர்தல் நடத்தை விதிகளின்படி 100 மீட்டர் தூரத்துக்கு முன்பே காரில் இருந்து இறங்கி அனைவரும் மனுத்தாக்கல் செய்யும் இடத்துக்கு வந்தனர். அமைச்சர்கள் கந்தசாமி, ஷாஜஹான், கமலக்கண்ணன், அரசுக் கொறடா அனந்தராமன், பேரவை துணைத் தலைவர் சிவக்கொழுந்து, திமுக சார்பில் பொறுப்பாளர் க.பொன்முடி, திமுக அமைப்பாளர்கள் இரா.சிவா, எஸ்பி.சிவக்குமார், விசிக தேவ.பொழிலன் மற்றும் புதிய நீதிக்கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் கட்சி கட்சியினரும் உடன் வந்தனர்.
முதல்வர் நாராயணசாமி மொத்தம் 4 வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளார். அவருக்கு மாற்று வேட்பாளராக எவரும் மனுத்தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் புதன்கிழமை நிறைவடைந்தது. மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை 3-ம் தேதி நடைபெறும். மனுக்களை திரும்பப் பெற சனிக்கிழமை 5-ம் தேதி கடைசி நாளாகும்.
தேர்தல் வாக்குப்பதிவு 19-ம் தேதியும், வாக்குகள் எண்ணிக்கை 22-ம் தேதியும் நடைபெறுகிறது. தேர்தலுக்காக மொத்தம் 26 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...