புதுச்சேரி: சுஜித்குமார் அமைதியை குலைக்கும் வகையிலும், மக்களுக்கு அச்சம் விளைவிப்பவர்களையும் ஒடுக்க குண்டர் சட்டத்தை பயன்படுத்துங்கள் என காவல்துறைக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி காவல்துறை இயக்குனர் சுனில்குமார் கவுதம் எழுதிய சம்தான் காவ்யா என்ற அரசியலமைப்பு பற்றிய நூல் வெளியீட்டு விழா முதல்வர் நாராயணசாமி முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.
துணை நிலை ஆளுநர் கிரண்பேடி நூலை எழுதிய காவல்துறை இயக்குனரை பாராட்டிப் பேசுகையில்: அமைதியை குலைக்கும் வகையிலும், மக்களுக்கு அச்சம் விளைவிப்பவர்களையும் ஒடுக்க குண்டர் சட்டத்தை பயன்படுத்துங்கள். மக்கள் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.