விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவையில் இடதுசாரி கட்சிகள், விசிக ரயில் மறியல் போராட்டம்: 300 பேர் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் புதுச்சேரியில் இடதுசாரிகள் - விசிக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 3

News image
Updated On :18 அக்டோபர் 2016, 7:02 am

சுஜித்குமார்


புதுச்சேரி: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும் புதுச்சேரியில் இடதுசாரிகள் - விசிக சார்பில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

காவிரி நதி நீர் வழக்கில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நாடாளுமன்றத்தின் மூலம் தான் மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது.

இது தமிழர்களுக்கு எதிரான போக்கு எனக்கூறி தமிழகம், புதுச்சேரியில் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகள் மத்திய அரசைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. விவசாய அமைப்புகளும் ரயில் மறியல் போராட்டங்கள் நடத்தப்படும் என அறிவித்தன.

இதற்கு திமுக, காங்கிரஸ், மக்கள் நலக்கூட்டணி கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

ஏற்கெனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் திமுக, விவசாய அமைப்புகள் சார்பில் திங்கள்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.

இடதுசாரிகள்-விசிக மறியல் போராட்டம்
இதே கோரிக்கையை வலியுறுத்தி புதுச்சேரி ரயில் நிலையத்தில் நடைபெற்ற மறியல் போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை தாங்கினார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், விடுதலைச் சிறுத்தைகள் மாநில அமைப்பாளர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சோ.பாலசுப்பிரமணியம், ஆர்எஸ்பி லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்வேறு கட்சி நிர்வாகிகள் நாரா.கலைநாதன், அமு.சலீம், விஎஸ்.அபிஷேகேம்,

கே.முருகன், தினேஷ் பொன்னையா (இந்திய கம்யூனிஸ்ட்), வெ.பெருமாள், டி.முருகன், து.கீதநாதன், (மார்க்சிஸ்ட்) தமிழ்மாறன், அமுதவன் (விசிக) பழனி (மார்ஸ்சிஸ்ட் லெனினிஸ்ட்) உள்பட நூற்றுக்கணக்கானோர் மறியலில் கலந்து கொண்டனர்.

சென்னைக்கு சென்ற விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 300 பேரை போலீஸார் கைது செய்தனர். முன்னதாக உழவர் சந்தை அருகே இருந்து இடதுசாரி-விசிக தொண்டர்கள் ரயில் நிலையத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.