விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி: புதுச்சேரியில் நாளை துவக்கம்

தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி புதுச்சேரி வள்ளலார் சாலை (45 அடி சாலை)-ல் உள்ள வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

News image
Updated On :18 அக்டோபர் 2016, 9:02 am

சுஜித்குமார்



புதுச்சேரி: தமிழ்நாடு அரசின் பூம்புகார் கைவினைப் பொருள்கள் விற்பனைக் கண்காட்சி புதுச்சேரி வள்ளலார் சாலை (45 அடி சாலை)-ல் உள்ள வேல்சொக்கநாதன் திருமண மண்டபத்தில் புதன்கிழமை தொடங்குகிறது.

தமிழ்நாடு கைவினைப் பொருள்கள் மேம்பாட்டுக்கழகத் தலைவர் டாக்டர் சந்தோஷ் பாபு ஐஏஎஸ்., கண்காட்சியைத் தொடங்கி வைக்கிறார். 19.10.16-ல் தொடங்கும் இக்கண்காட்சி வரும் 27-ம் தேதி வரை நடைபெறுகிறது.

அனைத்து கைவினைப் பொருள்களுக்கும் 10 சதவீதம் சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கைவினைப் பொருள்கள், ஜவுளி உற்பத்தி துணிகள், நகைகள், செம்பு சிலைகள், பாரம்பரிய விளக்குகள், தஞ்சாவூர் கலைப் பொருள்கள், மரச்சிற்பங்கள், தஞ்சாவூர் ஓவியம், ராஜஸ்தான் ஓவியம், மரக்கூழால் ஆன கைவினைப் பொருள்கள், நாடு முழுவதும் தருவிக்கப்பட்டுள்ள கைவினைப் பொருள்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருக்கும்.

இத்தகவலை பூம்புகார் விற்பனையாக மேலாளர் சி.கோபிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.