நெல்லித்தோப்பு தொகுதியில் 4-வது நாளாக நாராயணசாமி தீவிர வாக்கு சேகரிப்பு
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை 4-வது நாளாக வெண்ணிலா நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.


புதுச்சேரி: புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை 4-வது நாளாக வெண்ணிலா நகர் பகுதியில் வாக்கு சேகரித்தார்.
நெல்லித்தோப்பு தொகுதி இடைத் தேர்தல் வரும் நவம்பர் 19-ம் தேதி நடக்கிறது. இதில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் வி.நாராயணசாமி போட்டியிடுகிறார்.
இந்நிலையில் அவர் நான்காம் நாளாக முருகா தியேட்டர் சந்திப்பு அருகில் உள்ள வெண்ணிலா நகர், பாலாஜி நகர், மோகன் நகர், சக்தி நகர் மேற்கு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
அப்போது அப்பகுதி மக்கள் சாலைகளில் கை சின்னம் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் கோலம் போட்டு வாக்கு சேகரிக்க வந்த காங்கிரஸ் மற்றும் தி.மு.க.வினருக்கு வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து பல்வேறு வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரித்து கொண்டிருந்தபோது ஒரு வீட்டில் உள்ள கைக்குழந்தையை தூக்கி வந்த பெற்றோர் முதல்வர் நாராயணசாமியிடம் கொடுத்து பெயர் சூட்டுமாறு கேட்டுக் கொண்டனர். உடன் முதல்வர் நாராயணசாமி அந்த குழந்தையை பெற்று கொஞ்சி மகிழ்ந்து ராகுல்காந்தி என பெயர் சூட்டினார்.
அமைச்சர்கள் மு.கந்தசாமி, ஆர்.கமலக்கண்ணன், தி.மு.க. தெற்கு மாநில அமைப்பாளர் இரா.சிவா, எம்.எல்.ஏ.க்கள் கீதா ஆனந்தன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், முன்னாள் எம்.எல்.ஏ, ஜான்குமார், காங்கிரஸ் பொது செயலாளர் ஏகேடி ஆறுமுகம் மற்றும் காங்கிரஸ், தி.மு.க. கட்சியினர் உடன் சென்று இருந்தனர்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...