விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காங்கிரஸ் அரசின் 100 நாள் சாதனை தேர்தல் முடிவில் எதிரொலிக்கும்: முதல்வர் நாராயணசாமி

காங்கிரஸ் அரசின் 100 நாள்கள் சாதனை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும்....

News image
Updated On :27 அக்டோபர் 2016, 7:43 am

சுஜித்குமார்

புதுச்சேரி: காங்கிரஸ் அரசின் 100 நாள்கள் சாதனை நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் எதிரொலிக்கும் என வேட்பாளரும், முதல்வருமான வி.நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் போட்டியிடும் நாராயணசாமி கடந்த 21-ம் தேதி முதல் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். தொடர்ந்து 7-வது நாளாக ஜேவிஎஸ் நகர், தோட்டக்கால் பகுதிகளில் வியாழக்கிழமை வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார். முன்னாள் எம்.எல்.ஏ. ஜான்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் உடன் சென்றனர்.


அப்போது செய்தியாளர்களிடம் முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
நெல்லித்தோப்பு தொகுதியில் காங்கிரஸ் பிரசாரம் திருப்திகரமாக உள்ளது. மக்கள் எழுச்சியான வரவேற்பு தருகின்றனர்.

காங்கிரஸ் அரசின் 100 நாள்கள் சாதனையின் பிரதிபலிப்பு மக்கள் முகத்தில் தெரிகிறது. இது நிச்சயம் தேர்தல் முடிவில் எதிரொலிக்கும். நான் அமோக வெற்றி பெறுவது உறுதி.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத், தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர்கள் தங்கபாலு, குஷ்பு ஆகியோர் பிரசாரம் செய்ய வருகின்றனர்.

சிலைக்கடத்தல் விவகாரம் தொடர்பாக புதுச்சேரி காவல்துறையினரும் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.