விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுச்சேரி சட்டப்பேரவையில் குழுக்களை அமைக்க ஸ்டாலின் வலியுறுத்துவாரா? அதிமுக கேள்வி

புதுச்சேரி சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களை அமைக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துவாரா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.

News image
Updated On :28 அக்டோபர் 2016, 7:17 am

சுஜித்குமார்


புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் பல்வேறு குழுக்களை அமைக்க தமிழக எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்துவாரா என அதிமுக கேள்வி எழுப்பி உள்ளது.

புதுவை சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ. அன்பழகன் எம்.எல்.ஏ. வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையி்ல் மதிப்பீட்டுக்குழு, மனுக்கள் குழு, பொதுக்கணக்கு குழு உள்பட பல்வேறு குழுக்களை அமைக்கவில்லை எனக்கூறி சட்டப்பேரவைத் தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும். மேலும் தமிழக ஆளுநரிடம் புகார் செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இவ்வாறு செய்வதற்கு முன்பு அவர் தங்களது கட்சி கூட்டணி வைத்துள்ள புதுச்சேரியில் ஆட்சி செய்யும் காங்கிரஸ் அரசு செயல்பாடுகள் குறித்து அவர் அறிந்திருக்க வேண்டும். புதுவைில் தேர்தல் நடைபெறறு 5 மாதங்கள் ஆகின்றன. சட்டப்பேரவையில் மனுக்கள் குழு, மதிப்பீட்டுக்குழு, பொதுக்கணக்கு குழு உள்பட 12-க்கு மேற்பட்ட குழுக்களை இதுவரை அமைக்க நாராயணசாமி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் பொதுக்கணக்கு குழு, மதிப்பீட்டுக்குழு, மனுக்கள் குழுக்களுக்கு முறையாக பேரவையில் தேர்தல் நடத்த வேண்டும். ஆனால் எதையும் காங்கிரஸ் அரசு மேற்கொள்ளவில்லை. இதுகுறித்து தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்து வாரா. காங்கிரஸ் அரசுக்கு அளித்து வரும் ஆதரவை திமுக வாபஸ் பெறுமா என்பதை ஸ்டாலி்ன் தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.