சென்னை நாம் தமிழர் கட்சி பேரணியில் வாலிபர் தீக்குளிப்பு முயற்சி!
காவிரி நதிநீர் பங்கீட்டில் உரிமை கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று சீமான் தலைமையில் நடத்திய பேரணியில், வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.


காவிரி நதிநீர் பங்கீட்டில் உரிமை கோரி சென்னையில் நாம் தமிழர் கட்சியினர் இன்று சீமான் தலைமையில் நடத்திய பேரணியில், வாலிபர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
காவிரி நதி நீர் பங்கீடு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று, தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவதில் கர்நாடகா சுணக்கம் காட்டுவதைக் கண்டித்தும், நதிநீரில் தமிழகத்திற்கு உள்ள உரிமையை வலியுறுத்தியும், சென்னை எழும்பூரில் நாம் தமிழர் கட்சியினர் இன்று பேரணி நடத்தினார்கள்.
இந்த பேரணிக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை வகித்தார். பேரணியில் இயக்குனர்கள் அமீர், சேரன் மற்றும் ரவிமரியா ஆகியோர் பங்கேற்றனர். நூற்றுக்கணக்கான நாம் தமிழர் கட்சி உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
சென்னை புதுப்பேட்டையை பேரணி நெருங்கி கொண்டிருந்த வேளையில், நாம் தமிழர் கட்சி தொண்டர் ஒருவர் திடீரென தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.உடலில் மண்ணெணெய் ஊற்றி பற்ற வைத்துக் கொண்ட வரை, அங்கிருந்தவர்கள் மற்றும் காவல்துறையினர் சேர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...