மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

டி.டி.வி.தினகரனுக்கு சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் நேரில் ஆதரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, சமத்துவ மக்கள் கட்சித்தலைவர்.. 

News image
Updated On :6 ஏப்ரல் 2017, 11:46 am

DIN

சென்னை: ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனுக்கு, சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் நேரில் சென்று ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவால் காலியாக உள்ள ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் போட்டியிடுகிறார். அவர் அத்தொகுதியில் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார்,  அதிமுக அம்மா அணி துணை பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனை நேரில் சென்று சந்தித்து, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தன்னுடைய  ஆதரவைத்த தெரிவித்தார்.

சந்திப்புக்குப் பின்னர் சரத்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர்வதற்கே டி.டி.வி.தினகரனுக்கு ஆதரவு தெரிவித்துள்ளேன். நாளை முதல் ஆர்.கே.நகர் தொகுதியில் அவருக்காக பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளேன்.இந்த ஆட்சியை எந்த சூழ்நிலையிலும் யாரும் புகுந்து கலைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் இந்த ஆதரவு நிலைப்பாடு.

இவ்வாறு சரத்குமார் தெரிவித்தார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.