மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தகுதியை இழக்கக்கூடிய நபராக டி.டி.வி.தினகரன் உள்ளார்: முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி

தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கக்கூடிய நபராக டி.டி.வி.தினகரன் தற்போது இருக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச்

News image
Updated On :8 ஏப்ரல் 2017, 2:10 am

DIN

சென்னை: தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கக்கூடிய நபராக டி.டி.வி.தினகரன் தற்போது இருக்கிறார் என்று ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியினர் புகார் மனு அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறியதாவது:

மதுசூதனனுக்கு தினமும் ஆதரவு பெருகிக்கொண்டிருப்பதை தாங்கிக்கொள்ள முடியாமல் டி.டி.வி.தினகரன் குண்டர்களை வைத்து வன்முறையில் இறங்கியிருக்கிறார். ஓ.பன்னீர்செல்வம் வாக்குகளை சேகரித்தபோது குண்டர்கள் வந்து சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் அளவில் நடந்துகொண்டனர்.

ஆனால் ஓ.பன்னீர்செல்வத்தின் தம்பி ராஜா, மகன் ரவீந்திரநாத், கார் டிரைவர் சிவா ஆகியோர் வன்முறையில் ஈடுபட்டதாக டி.டி.வி.தினகரன் அரசு எந்திரங்களை தன்வசப்படுத்தி புகார் பெறவைத்திருக்கிறார். அந்தப் புகாரை போலீஸார் ஏற்றுக்கொண்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். டி.டி.வி.தினகரனுக்கு அரசு இயந்திரம் அடிமையாக மாறியிருக்கிறது.

இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறியிருக்கிறோம். ஏற்கனவே, பணப்பட்டுவாடா செய்திருந்தாலும்கூட, டி.டி.வி.தினகரனையும் அந்தக் குடும்பத்தினரையும் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சசிகலாவின் அக்கா மகன் என்று தெரிந்திருப்பதால், அவர் என்ன செய்தாலும் ஏற்கமாட்டோம் என்ற நிலையில் வாக்காளர்கள் இருக்கின்றனர்.

தற்போது அவரால் தூண்டப்படும் வன்முறையால் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்படுகிறது. இதை தடுத்து நிறுத்தவேண்டும் என்று புகார் தெரிவித்துள்ளோம்.

வருமான வரி சோதனையானது அவர்களுக்கு வந்த தகவலில் அடிப்படையிலானது. இதில் எங்களுக்கு சம்பந்தமில்லை. தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்கக்கூடிய நபராக டி.டி.வி.தினகரன் தற்போது இருக்கிறார்.

ஜெயலலிதாவின் இறுதி ஊர்வலம்போல சித்தரித்து பிரசாரத்தில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. யாரோ ஒரு உணர்ச்சிவசப்பட்ட தொண்டர் அந்த செயலை செய்திருக்கிறார். அந்த தகவல் கிடைத்ததும் அதை உடனே அப்புறப்படுத்த சொல்லிவிட்டோம்.

அந்தத் தொண்டரையும் கண்டித்திருக்கிறோம். அவரும் வருத்தம் தெரிவித்திருக்கிறார். அங்கு இருந்த முன்னாள் அமைச்சர் பாண்டியராஜனும் அதை ஏற்கவில்லை என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.