பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சு வார்த்தைக்கு தயார்: அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அறிவிப்பு!

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் ...

News image
Updated On :29 ஜனவரி 2024, 7:50 pm IST

சென்னை: அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் எந்த நிபந்தனைகளும் இன்றி பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அதிமுக எம்.பி.வைத்திலிங்கம் அறிவித்துள்ளார்.

தலைமைச் செயலகத்தில்  இன்று மாலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் அதிமுகவின் ராஜ்யசபா எம்.பி.வைத்திலிங்கம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது தொடர்பாக ஓ.பி.எஸ் அணியினருடன் பேச குழுக்கள் அமைக்கப்படும். இதற்கு எங்கள் தரப்பில் எந்த விதமான நிபந்தனைகளும் இல்லை. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நல்லாட்சி தொடர வேண்டும் என்பதும், அதற்காக இரட்டை இலை சின்னம் மீட்கப்பட வேண்டும் என்பதே எங்கள் பிரதான நோக்கங்களாகும். இதுவே அனைத்து தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் விருப்பமாகும்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ விசாரணை நடத்த வேண்டுமென்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.தற்பொழுது இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதனை நிறைவேற்ற இந்த அரசு தயாராக உள்ளது.

இவ்வாறு வைத்திலிங்கம் தெரிவித்தார்.

சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது அவர்கள்தான். அவர்கள் அதனை வாபஸ் பெற்று விட்டால் மேற்கொண்டு எதுவும் இல்லை என்று பேட்டியின் பொழுது உடனிருந்த சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.