புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தமிழகத்தில் பாஜக காலூன்ற பகல்கனவு காண்கிறது: திமுக துரைமுருகன் எச்சரிக்கை

தமிழகத்தில் பாஜக காலூன்ற வைத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டால் அது பகல்கனவாகவே முடியும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை

News image
Updated On :26 ஏப்ரல் 2017, 8:20 am

DIN

சென்னை: தமிழகத்தில் பாஜக காலூன்ற வைத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போட்டால் அது பகல்கனவாகவே முடியும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜனுக்கு திமுக முன்னாள் அமைச்சரும் முதன்மைச் செயலாளருமான துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக மற்றும் பிற கட்சிகள் இணைந்து நேற்று நடத்திய முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல் தமிழிசை கதைக்கு உதவாத தப்பான வாதங்களையும் தகவல்களையும் வெளியிட்டு வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

காவிரி விவகாரம், விவசாயிகள் நிவாரண நிதி, நீட் தேர்வு என தமிழகத்தை தொடர்ந்து பாஜக அரசு வஞ்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ள துரைமுருகன், அதற்கு தமிழிசை ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

தவறான அறிக்கைகள் மூலமாக தமிழகத்தில் பாஜக காலூன்ற முடியாது அது பகல்கனவாகவே முடியும் என்று கூறிய துறைமுருகன், வறட்சியில் வாடும் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளிலும் அரசியல் செய்ய முயற்சி செய்ய வேண்டாம் என்று தமிழிசை கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.