சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து முடக்க விவகாரம்: புதுகை மாவட்டப் பதிவாளர் பணியிட மாற்றம்

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து முடக்கம் தொடர்பாக, வந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்டப் பதிவாளர் சசிகலா திடீரென விருதுநகருக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:34 pm

DIN

அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்து முடக்கம் தொடர்பாக, வந்த கடிதத்தைப் பெற்றுக்கொண்ட மாவட்டப் பதிவாளர் சசிகலா திடீரென விருதுநகருக்குப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, கல்லூரி, குவாரி உள்ளிட்ட இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன் வருமான வரித் துறையினரால் நடத்தப்பட்ட சோதனையின் தொடர்ச்சியாக விசாரணை நடந்து வருகிறது. அப்போது ஆய்வு செய்யப்பட்ட சொத்துகளை பிறருக்குப் பெயர் மாற்றுவதையோ அல்லது விற்பதையோ தடை செய்யும் வகையில் வருமான வரித்துறை சார்பில் மாவட்டப் பதிவாளர் அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலையிலிருந்தே அமைச்சர் விஜயபாஸ்கரின் சொத்துகள் முடக்கப்பட்டதாக உறுதி செய்யப்படாத செய்திகள் வெளியானது. இதையடுத்து புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளராகப் பணியாற்றிய சசிகலா, விருதுநகர் மாவட்டப் பதிவாளராக இடமாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், திடீர் பணியிட மாற்றம் தொடர்பாக பதிவுத் துறை வட்டாரங்கள் கூறுகையில், அரசு ஆணை 327-ன்படி தமிழகம் முழுவதும் பதிவாளர்களும், 270 சார் பதிவாளர்களும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாகத் தெரியவந்தது. மேலும், தற்போது காரைக்குடி சார் பதிவாளராக உள்ள கண்ணன் பதவி உயர்வில் புதுக்கோட்டை மாவட்டப் பதிவாளராகப் பொறுப்பேற்க உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.