
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் ஒருங்கிணைந்து, அதிமுகவையும், ஆட்சியையும் வழி நடத்துகின்றனர் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் வியாழக்கிழமை அதிமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்களுடன் கூட்டம் நடைபெற்றது. இதில், சசிகலாவால் துணைப் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட டி.டி.வி.தினகரன் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டும், அவரால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புகள் செல்லாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஜெயலலிதா விட்டுச் சென்ற கட்சி, ஆட்சிப் பணிகளை அவரால் நியமிக்கப்பட்ட மூத்த நிர்வாகிகள் ஒருங்கிணைந்து வழி நடத்துகின்றனர் என்றார்.
அப்போது, சசிகலாவால் அதிமுக பொருளாளராக அறிவிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், கட்சியின் வரவு, செலவு கணக்குகளைப் பார்க்கும்போது, துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட, தான் ஏன் கட்சி செயல்பாடுகளில் ஈடுபடக் கூடாது என டி.டி.வி. தினகரன் கேள்வி எழுப்பி இருக்கிறாரே என்று நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு பதிலளித்த அமைச்சர் உதயகுமார், 'ஜெயலலிதாவால் கட்சிப் பொறுப்புகளில் நியமிக்கப்படாத அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் டிடிவி தினகரனை நீக்கியதற்கான தீர்மானத்தில் கையொப்பம் இடவில்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.