/

வட தமிழகத்தில் 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:38 pm

DIN


சென்னை: வட தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாளை முதல் வரும் 14ம் தேதி வரை வட தமிழகத்தில் பரவலாக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், வெப்பச்சலனம் காரணமாக தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிகபட்சமாக 8 செ.மீ. மழையும், நெய்வேலியில் 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.