தமிழகத்தின் ஒரு சில இடங்களில் கன மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை: தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய மழை நிலவரம் குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது, சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் இருந்து தென் தமிழகம் வரை ஏற்பட்ட மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால், தமிழகத்தில் பரவலாக மழை பெய்யவும், ஒரு சில இடங்களில் கன மழை பெய்யவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
மேலும், பெங்களூரில் திங்கட்கிழமை நள்ளிரவு 4 மணி நேரத்தில் 14 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...