அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு

அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.
அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நீக்கம்: டிடிவி தினகரன் அறிவிப்பு
Published on
Updated on
1 min read

அம்மா பேரவை செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நீக்கப்பட்டுள்ளதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், 
அம்மா பேரவைச் செயலாளர் பொறுப்பில் உள்ள R.B.உதயகுமார் இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்‍கப்பட்டு, அவருக்‍கு பதிலாக எஸ்.மாரியப்பன்கென்னடி எம்.எல்.ஏ., நியமிக்‍கப்படுவதாக தெரிவித்துள்ளார்.

கழக அமைப்புச் செயலாளர் பொறுப்புக்‍கு தஞ்சை வடக்‍கு மாவட்ட கழகச்​ செயலாளர் M.ரெங்கசாமி எம்.எல்.ஏ., இன்று முதல் நியமிக்‍கப்படுகிறார்.

மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் இருந்து V.V.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., விடுவிக்‍கப்பட்டு, அவருக்‍கு பதிலாக மதுரை புறநகர் மாவட்ட கழகச் செயலாளராக முன்னாள் எம்.எல்.ஏ., இ.மகேந்திரன் நியமிக்‍கப்படுகிறார்.

தஞ்சாவூர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் பொறுப்பில் மாவட்ட அம்மா பேரவைச் செயலாளர் மா.சேகர் இன்றுமுதல் நியமிக்‍கப்படுகிறார்.

விருதுநகர் மாவட்ட கழகப் பொருளாளர் பொறுப்பில் இருந்து M.S.R. ராஜவர்மன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்து N.அழகர்சாமி ஆகியோர் விடுவிக்‍கப்படுகின்றனர். M.S.R. ராஜவர்மன், அம்மா பேரவை இணைச் செயலாளர் பொறுப்பில் தொடர்ந்து செயல்படுவார்.

விருதுநகர் மாவட்ட கழக பொருளாளராக T.முத்தையா நியமிக்‍கப்படுகிறார்.

விருதுநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற மாவட்டச் செயலாளராக C.சுப்பிரமணியம், மாவட்ட இணைச் செயலாளராக N.அழகர்சாமி நியமிக்‍கப்படுகின்றனர்.

விருதுநகர் மாவட்ட அம்மா பேரவை மாவட்ட இணைச் செயலாளராக K.விவேகானந்தன் நியமிக்‍கப்படுகிறார்.

விருதுநகர் மாவட்ட கழக மகளிர் அணி மாவட்டச் செயலாளராக கவிதா தனசேகரன், மாவட்ட இணைச் செயலாளராக M.சொர்ணம் ஆகியோர் நியமிக்‍கப்படுகின்றனர்.

எனவே, புதிய நிர்வாகிகளுக்‍கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று அதிமுக அம்மா துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கேட்டுக்‍கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com