சென்னை: முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரையும் ஆண்மையற்றவர்கள் என்று விமர்சித்திருந்த துக்ளக் ஆசிரியர் 'ஆடிட்டர்' குருமூர்த்தியை, 'ஆண்மையற்ற குருமூர்த்திதான் அதைப் பற்றியெல்லாம் பேசுவார்' என்று அமைச்சர் ஜெயக்குமார் கடுமையாக விமர்சித்துள்ளார்.
சமீபத்தில் முடிந்த ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன் எதிரொலியாக அதிமுக உயர் மட்டக் குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதன் முடிவில் வெற்றிவேல், புகழேந்தி மற்றும் சி.ஆர்.சரஸ்வதி உள்ளிட்ட டிடிவி தினகரன் ஆதரவாளர்களான சிலர் நீக்கப்பட்டனர்.
இந்த முடிவை துக்ளக் ஆசிரியர் 'ஆடிட்டர்' குருமூர்த்தி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் தன்னுடைய பதிவில், 'ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலில் அடைந்த அதிர்ச்சி தோல்விக்குப் பிறகு, ஆறு மாதங்களுக்குப் பின் தினகரன் ஆதரவாளர்கள் மீது நடவடிக்கை. இந்த இரு தலைவர்களும் ஆண்மையற்றவர்கள்' என்று விமர்சித்திருந்தார்.
இந்நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:
முதல்வர் மற்றும் துணை முதல்வர் இருவரையும் ஆண்மையற்றவர்கள் என்று 'ஆடிட்டர்' குருமூர்த்தி விமர்சித்துள்ளார். ஆண்மையற்ற குருமூர்த்திதான் அதைப் பற்றியெல்லாம் பேசுவார். ஆண்மை உள்ளவர்கள் அதைப் பற்றி பேச மாட்டார்கள். அவரது இந்த பேச்சு கீழ்த்தரமான ஒன்று. ஆண்மையற்ற குருமூர்த்திதான் இப்படி பேசக்கூடாது.
நாங்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா வழி வந்தவர்கள். இப்படி நடந்து கொள்ள மாட்டோம். 'ஆடிட்டர்' குருமூர்த்தி எங்கிருந்து வந்தார்? அவர் என்ன வானத்தில் இருந்து குதித்து வந்தவரா? அவரது பேச்சு தவறானது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகி விடும். இது போன்ற நாலாந்தரமான பேச்சுகளுக்கு பதில் சொல்லிக் கொண்டு இருக்க முடியாது; கூடாது.
ஒரு மாபெரும் இயக்கமான எங்களது அதிமுகவின் தன்மானத்திற்கு ஏதேனும் சோதனை வந்தால் பொறுத்துக் கொள்ள மாட்டோம். ஒரு கை பார்த்து விடுவோம். அவருக்கு பதிலாக நல்ல பரிகாரம் செய்யப்படும். படிக்காதவர்கள் கூட பண்புடன் பேசுவார்கள். ஆனால் 'ஆடிட்டர்' குருமூர்த்தி ஒரு படித்த முட்டாள்.
இவ்வாறு ஜெயக்குமார் பதிலளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
முக்கிய இடங்களில் சிசிடிவி மூலம் பாகிஸ்தானுக்கு உளவுபாா்த்த கும்பல் - பஞ்சாபில் ஒருவா் கைது
திருச்சியில் கஞ்சா விற்பனை: 2 பெண்கள் உள்பட மூவா் கைது

வாக்கு எண்ணிக்கை: தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும்!

அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


