தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

சுயவிருப்பத்தின் பேரிலேயே கூவத்தூரில் தங்கியுள்ளோம்: அதிமுக எம்.எல்.ஏ பேட்டி! 

சுயவிருப்பத்தின் பேரிலேயே கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்கியுள்ளோம் என்று காட்டுமன்னார் கோவில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் பேட்டியளித்துள்ளார்.

News image
Updated On :10 பிப்ரவரி 2017, 7:23 am

DIN

சென்னை: சுயவிருப்பத்தின் பேரிலேயே கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்கியுள்ளோம் என்று காட்டுமன்னார் கோவில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் பேட்டியளித்துள்ளார்.

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்களை கட்டாயப்படுத்தி சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள விடுதியொன்றில் தங்க வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசு, டி.ஜி.பி மற்றும் காவல் துறை ஆணையருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள கூவத்தூரில் உள்ள விடுதியிலிருந்து அதிமுகவின் காட்டுமன்னார் கோவில் அதிமுக எம்.எல்.ஏ முருகுமாறன் பேட்டியளித்துள்ளார்.அப்பேட்டியில் அவர் கூறியுள்ளதாவது:  

சுயவிருப்பத்தின் பேரிலேயே அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கூவத்தூரில் உள்ள விடுதியில் தங்கியுள்ளோம். எங்களை எவரும் கட்டாயப்படுத்தவில்லை. அதேபோல சுயவிருப்பத்தின் பேரிலேயே எங்ககளது மொபைல் போன்களை அனைத்து வைத்துள்ளோம். எங்கள் மொபைல்கள் இயங்கி கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாங்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக திமுக விசமப் பிரச்சாரம் செய்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.