விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

புதுவையில் போராட்டக்குழுவினரை கலைக்க முயற்சிக்க மாட்டோம்: முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரே அதை நிறைவு செய்வது குறித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :23 ஜனவரி 2017, 8:51 am

சுஜித்குமார்


புதுச்சேரி: புதுச்சேரியில் ஜல்லிக்கட்டு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரே அதை நிறைவு செய்வது குறித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

அண்ணா நகரில் பாப்ஸ்கோ சார்பில் புதிய காய்கறிக் கடையை திங்கள்கிழமை முதல்வர் திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜல்லிக்கட்டுக்காக மாணவ, மாணவியர் அமைதியான முறையில் புதுவையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழகத்தில் சட்டப்பேரவையில் ஜல்லிக்கட்டு தொடர்பான சட்டம் நிறைவேற்றப்படுகிறது. புதுச்சேரி சட்டப்பேரவையிலும் ஜல்லிக்கட்டு தொடர்பாக உரிய முடிவெடுக்கப்படும்.

மாணவியர் போராட்டம் நடைபெறும் இடத்தில் அதிகளவு உள்ளதால், அங்கு இரவு நேரத்தில் கூடுதலாக பெண் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் போராட்டம் நடத்தி வரும் மாணவ, மாணவியரை கலைக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட மாட்டார்கள். போராட்டக்காரர்களே நல்ல முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றார் நாராயணசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.